அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.36 லட்சத்துக்கு ஏலம்:

புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.36 லட்சத்திற்கு ஏலம்
எடுக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் இந்திய
ரூபாய் மதிப்பில் ரூ.36 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
நவீன கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய தத்துவார்த ஆராய்ச்சியின் போது சமர்பித்த சில
கட்டுரைகளில் சந்தேகம் கோரி அயோவா மாகாண பள்ளி ஆசிரியவர் ஒருவர்
ஐன்ஸ்டீனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவரது கடிதத்திற்கு விரிவான
பதிலளித்து ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 1953-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்
தேதி அனுப்பப்பட்டுள்ளது.
அந்த பள்ளி ஆசிரியரின் பாதுகாப்பில் இருந்து வந்த இந்த கடிதம் தற்போது
கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள நேட் சாண்டர்ஸ் ஏல
விற்பனை நிறுவனத்தின் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் ஆரம்ப ஏல விற்பனை விலை 15,000 அமெரிக்க டாலராக
நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் 53,503 அமெரிக்க டாலருக்கு (இந்திய
மதிப்பில் சுமார் ரூ. 36 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.