கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?
வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில்
நாம் உண்ணும் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு
உடல்நல அவதிகளுக்கு உள்ளாக நேரலாம்.
உதாரணமாக, கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லது, கெட்டதா என்ற சஞ்சலம் சிலருக்கு இருக்கலாம். அதுபற்றிய விடை தேடினால்...
முட்டையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்திருக்கின்றன.
அவ்வளவு சத்துகள் நிறைந்த முட்டையை கோடைகாலத்தில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் அது சரியில்லை என்கின்றனர், உணவியல் வல்லுநர்கள்.
உண்மையில், கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம் என்கின்றனர் அவர்கள்.
முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள், கோடையில் உடலின் நீர்ச்சத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன.
மேலும் முட்டை உடலின் ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் உடல் சோர்வு, பலவீனத்தைத் தடுக்கிறது.
ஆனால் முட்டையின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும். அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதும் நல்லதல்ல.
காரணம், கோடையில் அளவுக்கும் அதிகமாக முட்டை உட்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு அசவுகரியங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொதுவாகவே, கோடை கடக்கும் வரை அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது என்பது அவர்களின் அறிவுரை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...