ஏப்ரல்–1க்கு பதிலாக ஜனவரி–1 முதல் நிதி ஆண்டா? மத்திய அரசு பரிசீலனை:
பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர், ‘‘நமது இந்திய சூழலுக்கு ஏற்றவாறு
அமையாத நிலையில், 150 ஆண்டு கால ஆங்கிலேயர் வழக்கத்தின்படி ஏப்ரல்–1
அன்றுதான் நிதி ஆண்டு தொடங்க வேண்டுமா? இது தொடர்பாக சங்கர் ஆச்சார்யா
கமிட்டி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அளித்த பரிந்துரைகள்மீது அரசு ஏன்
நடவடிக்கை எடுக்கவில்லை?’’ என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி பதில் அளித்தார்.
அப்போது
அவர், ‘‘இது மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்புடைய விஷயம்.
எனவே அதை கருத்தில் கொண்டு பரந்த ஆலோசனைகள் நடத்த வேண்டி உள்ளது. ஜனவரி
1–ந் தேதி முதல் நிதி ஆண்டை தொடங்கி விடுமாறு செய்யப்பட்ட பரிந்துரைகளை
அரசு பரிசீலித்து வருகிறது’’ என்று கூறினார்.
மேலும் அவர்
கூறும்போது, ‘‘ இந்த பிரச்சினையின் ஒரு பகுதியாகத்தான் மத்திய பட்ஜெட்
நடவடிக்கைகளை ஏப்ரல் 1–ந் தேதிக்கு முன் முடித்துள்ளோம். இதனால்
துறைகளுக்கும், மாநிலங்களுக்கும் செலவினங்களுக்கான நிதி அந்த நாளுக்கு
முன்னதாக போய்ச் சேர்ந்து விடும்’’ என குறிப்பிட்டார்.







