VERY GOOD TEACHERS | BEST WISHES BY KALVIKURAL: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


VERY GOOD TEACHERS | BEST WISHES BY KALVIKURAL:

வருகையிலும் விடை பெறுகையிலும் மாணவர்களை நெகிழ வைக்கும், மதுரை அரசுப் பள்ளி ஆசிரியர்!

நீங்கள் படித்த பள்ளியின் நினைவாக உங்கள் வீட்டில் என்ன
ஆசிரியர்இருக்கிறது?
பலரிடமும் வகுப்பு நண்பர்களோடு எடுத்துக்கொண்ட குரூப் போட்டோதான் இருக்கும். ஆனால், மதுரை அருகே உள்ள சிட்டம்பட்டி பள்ளி மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியை நினைவூட்டும் ஒரு விஷயம் அவர்களுக்குப் பரிசாக கிடைத்து வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சிட்டம்பட்டி எனும் அழகான கிராமம். அங்கு இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பெ. சிவராமன். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனி அக்கறை காட்டுபவர் இவர். தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பசுமையைக் காக்கும் பணிக்கு வழிகாட்டுகிறார்.
சிட்டம்பட்டி பள்ளியில் இன்று நடந்த விழாவில் அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிப்பு முடிந்து செல்லும் 30 மாணவர்களுக்குத் தென்னங்கன்றுகளைப் பரிசாக அளித்துள்ளார். 'விடைபெறும்போது தரப்படும் பரிசு எனில், அந்த மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதம் பள்ளி இருக்கிறதே... இப்போதே ஏன்?'
 teacher
"இந்த மரக்கன்றுகளை அவர்கள் வீட்டில் நாளைக்கே நட்டுவிடுவார்கள். அதற்கு இவர்கள்
வளர்ச்சியைப் பார்த்து மகிழ்வார்கள். இந்த விஷயங்களை எங்களிடம் கூறும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதனால்தான் ஒரு மாதம் முன்கூட்டியே மரக்கன்றுகளைத் தந்தோம்" என்கிறார் ஆசிரியர் சிவராமன்.
பள்ளியில் இருந்து விடைபெறும் மாணவர்களுக்கு மட்டுமல்ல; புதிதாகப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கும் மரக்கன்றுகளைப் பரிசளித்து வருகிறார் சிவராமன். அடுத்த கல்வி ஆண்டில் சேரப்போகும் மாணவர்களுக்காக இப்போதே மாமரக் கன்றுகளை ஆர்டர் செய்துவிட்டாராம்.
"எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பிறந்தநாளின்போது, அவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுப்பது வழக்கம். ஏழு கிராமங்களில் இருந்து மாணவர்கள் எங்கள் பள்ளிக்குப் படிக்க வருகின்றனர். மழை பெய்யும் மாதங்களான அக்டோபர், செப்டம்பர் உள்ளிட்ட மாதங்களில் வாரம் ஒரு கிராமத்துக்குச் செல்வேன். பள்ளி மாணவர் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கின்றனரோ, அத்தனை மரக்கன்றுகளைத் தருவேன். சிலர் வீடுகளில் இடம் இருக்காது அல்லது வாடகை வீடுகளில் இருப்பார்கள். அதுபோன்றவர்களுக்கு அவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசளிக்கச் சொல்வோம்" என்கிறார் சிவராமன்.

இந்த மரக்கன்றுகள் இவருக்கு எப்படி கிடைக்கிறது?
 ஆசிரியர்
"மதுரையில் ஒரு நர்சரி இருக்கிறது. அதன் உரிமையாளரின் அப்பா ஓர் ஆசிரியர். அதனால், நான் பள்ளி மாணவர்களுக்காக மரக்கன்றுகள் வாங்குகிறேன் எனத் தெரிந்ததும், பாராட்டினார். விலையிலும் ரொம்பவே குறைத்துக்கொள்கிறார். இப்போது கொடுத்த தென்னங்கன்று வெளியில் 110 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. எனக்கு 60 ரூபாய்க்குத்தான் தருகிறார்" என்றார் சிவராமன்.
மரக்கன்றுகளை விலைக்கு வாங்குவதற்காக யாரிடமும் நிதியுதவி பெறாமல், தனது சொந்தப் பணத்திலேயே இந்தச் சேவையைச் செய்துவருகிறார். இவர் இந்தப் பள்ளிக்கு வேலைக்கு வரும்போது மிகக் குறைந்த மரங்களே இருந்தன. இப்போது 210 மரங்கள் குளிர்ச்சியோடு காற்றை வீசிக்கொண்டிருக்கின்றன.
தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இந்தப் பணியை எளிமையாக்குகிறது என்கிற சிவராமன், இந்தப் பசுமைப் பயணத்தில் சுமார் 9000 மரக்கன்றுகள் தந்திருப்பதாக கூறி, வியப்படைய வைக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தை, பெரும் பண்டிகையைப் போல பள்ளியில் மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

மாணவர்களுக்கு ஊக்கம் தரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்கும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H