விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் வரும் 15-ம்
தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம்
94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக
உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.முன்னதாக, விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும்
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள்
தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை
(ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர்
அறிவித்துள்ளார்.
மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.விடைத்தாள் நகல் பெற கட்டணம் பகுதி I மொழிப் பாடத்துக்கு550 ரூபாயும், பகுதி II மொழிப் பாடத்துக்கு 550 ரூபாயும், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 275 ரூபாயும் பணமாக செலுத்த வேண்டும்.