இந்த முறையால் ஆணை மற்றும் ஊதியம் வழங்குதலில் சில சமயங்களில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் முறையாக சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி சம்பளம் பெறுகின்றனர்.இந்த ஆண்டுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால், ஏப்ரல் மாத சம்பளம் ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத்தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








