குரூப் - 2 'ஏ' பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்
'குரூப் - 2 ஏ' பதவிக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 15ம் தேதி
துவங்குகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2 ஏ' பதவிகளுக்கான, எழுத்து தேர்வு, ஜன., 24ல் நடந்தது.
முடிவுகள், ஜூன், 8ல், வெளியானது. தகுதி பெற்றவர்களுக்கான, இரண்டாம் கட்ட
சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 1 முதல், 10 வரை நடந்தது. அதில்,
தேர்வானோருக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், மே, 15 முதல், 17 வரை
நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







