தின பலன்14.05.2017
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள்
எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம்
வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன
வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம்,பிங்க்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.
உறவினர்கள்,நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண்
விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில்
சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை,ரோஸ்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண
பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை,ஆபரணம் சேரும். வாகனப் பழுதை சரி
செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
இங்கிதமான
பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள்
வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது
ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை
வாங்குவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு,கிரே
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,உறவினர்களால்
ஆதாயமும் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி
வருவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,வைலெட்
தள்ளிப்
போன விஷயங்கள் உடனே முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு
மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து
லாபம் ஈட்டுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு
தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு
திருப்தி தரும். முகப்பொலிவுக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள்
உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள்
கொள்முதல் செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசிக்குள்
சந்திரன் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல்
அவதிக்குள்ளாவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல்
அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சில நேரங்களில் வெறுப்பாக
பேசுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு
பழைய
கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக
இருப்பார்கள். அண்டை,அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம்,எரிச்சல்
அடையலாம். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி
வசூலிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளியூரிலிருந்து
நல்ல செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத்
தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா
சுறுசுறுப்புடன்
செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்.
உறவினர்கள்,நண்பர்களால் அனுகூலம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள்.
மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம்
கையெழுத்தாகும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம்