வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2017-18ம் கல்வியாண்டில் 14
உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரி மூலம் 13 வேளாண் பட்டப்படிப்பு உள்ளது.
வேளாண்ைம, தோட்டக்கலை, வனவியல், இளம் தொழில்நுட்ப படிப்புகளில் உயர்
தொழில்நுட்பவியல், உயிர்தகவலியல் உள்பட 13 பட்டப்படிப்புகள்
வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மொத்தம் 2,820 இடங்கள் உள்ளன. இந்த
இடங்களில் சேர மாணவர்கள் மே 12ம் தேதி முதல் ஜூன் 4ம் ேததி வரை ஆன்லைனில்
விண்ணப்பித்தனர். மாணவர்கள் 23,065 பேர், மாணவிகள் 29,985 பேர் மற்றும்
திருநங்கை 4 பேர் என 53,052 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வேளாண்
பட்டப்படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
- RANK LIST CLICK HERE