TET - 1111 ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் - நாளை சான்று சரிபார்ப்பு
அரசு தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1111 பட்டதாரி ஆசிரியர், சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதிப் பட்டியலை பிப்ரவரி மாதம் தயாரித்தது.
மேலும், சந்தேகம் இருப்பின், கடந்த மார்ச் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பட்டியலில் உள்ளவர்களுக்கு சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடக்க இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம்