துவக்கத்தில் வாட்ஸ்அப் சேவைகள் கட்டண
அடிப்படையில் வழங்கப்பட்டு பின் அதுவும் செலுத்த வேண்டாம் என வாட்ஸ்அப்
தெரிவித்தது. இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த வாட்ஸ்அப் சேவை, இனியும்
இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே
வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் நோக்கில் புதிய வதந்தி பரப்பப்பட்டு
வருகிறது. வாட்ஸ்அப்பில் பரவி வரும் தகவலில் உங்களது சந்தா நிறைவுற்றது,
உங்களது கணக்கினை உறுதி செய்த பின், வாழ்நாள் சந்தாவை 0.99 GBP செலுத்தி
பெற்றிடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி
குறுந்தகவலில் இடம்பெற்றுள்ள லின்க் கொண்டு பயனர்களின் கட்டண விவரங்களை
பறிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் வாட்ஸ்அப் சேவையை தொடர பணம்
செலுத்த வேண்டும் என்பது போன்ற குறுந்தகவல்களை வாடிக்கையாளர்கள் நம்ப
வேண்டியதில்லை.
வாட்ஸ்அப் இதுவரை வழங்கப்பட்டு வருவதை போன்றே இலவசமாக வழங்கப்படும்.