இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின்
பாதுகாப்பு குறித்து அதிக கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான்
அவர்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
எங்கேயும் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பார்கள். அவர்களின்
ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். பார்த்துப் பார்த்து
உணவூட்டுவார்கள். சிறு உடல்நல பாதிப்பு என்றாலும் துடித்துப் போய்
ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள்.
இப்படிப்பட்ட பெற்றோரை பிற பெற்றோரும் வியப்பாய் பார்ப்பார்கள். ‘பெத்தவங்கன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்பார்கள்.
இப்படிப்பட்ட பெற்றோரை பிற பெற்றோரும் வியப்பாய் பார்ப்பார்கள். ‘பெத்தவங்கன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்பார்கள்.