மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி !!
அதேபோல் தமிழகத்தில் உள்ள முதுகலை மருத்துவ மேற்படிப்பு இடங்கள் 1097 மற்றும் முதுகலை டிப்ளமோ இடங்கள் 396க்கான கலந்தாய்வு முடிந்தாலும் மாணவர்களின் நலனை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு நீட் மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறுவதால்தான் 85 சதவீத உள்ஒதுக்கீடு முறையை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்த அரசாணைக்கான உரிய விளக்கத்தை அரசு வழங்கி மாணவர்களின் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.








