ஒரு நாள் ஊதியத்தை அல்ல பல நாட்கள் ஊதியத்தை பிடித்தாலும் மீண்டும் இழந்த ஊதியத்தை பெற்று தரும் இயக்கம் ஜாக்டோ- ஜியோ !!
வேலை நிறுத்தம் செய்தால் ஊதியம் இல்லை என அரசு அறிவிப்பது தொன்றுதொட்டு
நடைபெற்று வருவது. இன்றைய தலைமைச் செயலாளரின் அறிவிப்பு ஒன்றும் நமக்கு
புதிதல்ல. அவர்கள் அப்படித்தான் எச்சரிக்கை விடுவார்கள். கோரிக்கைகள் மீது
முழு நம்பிக்கை வைத்து போராட்டக் களத்தில் இறங்கி போராடிவரும் போராளிகள்
அதைப்பற்றி கண்டுகொள்ள தேவையில்லை.1985 போராட்டத்தில் 41 நாள்கள் போராடி சிறையில் இருந்த நாள்களுக்கும்
ஊதியம் பெற்றோம். அப்போது புரட்சித்தலைவர் MGR அவர்கள் முதலமைச்சராக
இருந்தார்கள். அப்போது இருந்த இயக்கங்கள்தான் இப்போதும் ஜேக்டோ-ஜியோ
அமைப்பில் இருக்கிறார்கள். 1988 போராட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த
நாள்களுக்கும் ஊதியம் பெற்ற இயக்கங்கள்தான் இப்போதும் ஜேக்டோ-ஜியோ
அமைப்பில் இருக்கிறார்கள். 2003 டெஸ்மா போராட்டத்தில் ஈடுபட்டு வேலை
நிறுத்தம் செய்த நாள்களுக்கும் 7 ½ மாதங்கள் நிரந்தர பணிநீக்கம்
செய்யப்பட்ட நாள்களுக்கும் ஊதியம் பெற்ற இயக்கங்கள்தான் இப்போதும்
ஜேக்டோ-ஜியோ அமைப்பில் இருக்கிறார்கள்.
ஈடு இணையற்ற மக்களின் செல்வாக்கை பெற்றிருந்த முதலமைச்சர்கள் இருந்த காலத்திலேயே நடைபெற்ற போராட்டங்களில் சங்கங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை. இன்றைய ஆட்சியாளர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நாமும் அறிவோம் நாடும் அறியும்.ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும் என்ற தத்துவத்தை உணர்ந்த போராளிகள்தான் ஜேக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள போராளிகள். இழந்ததை மீட்டெடுத்திட தொடர் போராட்டக் களத்தில் நின்று போராடுவதைத் தவிர வேறு மாற்றுச் சிந்தனை நமக்கு தேவையில்லை.
படுபாதகமான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு 8 வது ஊதியக்குவில் மத்திய அரசுக்கு இணையாக ஊதிய மாற்றத்தினை இடைநிலை ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டும். 8 வது ஊதியக்குழுவின் ஊதியக் உயர்வு பணப்பயன் வழங்குவதற்கு தமிழக அரசு எடுத்து வரும் காலதாமதத்தினை கருத்தில்கொண்டு இடைக்கால நிவாரணம் 20% தொகை 01.01.2016 முதல் வழங்க உடன் அரசாணை வெளியிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வென்றெடுக்க போராடி வரும் போர்க்குண வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான ஆசிரிய பேரினமே அரசு ஊழியர்களே அரசு பணியாளர்களே நம் கோரிக்கைகளின் வெற்றி அரசிடம் இல்லை நமது போராட்ட வலிமையில்தான் உள்ளது. கோரிக்கைகள் வெற்றி பெறும்வரை களத்தில் நின்று குரல் கொடுப்போம்.வெற்றி நம்மை தேடி வரும்.வேலை நிறுத்தத்திற்கு தயாராகுங்கள்.
போராட்ட பாரம்பரியத்தில் வளர்ந்து வருகிற ஆசிரியர் கொள்கை வைரங்களே ஜேக்டோ-ஜியோ பதாகையை உயர்த்திப்பிடித்து முன்னணியில் சென்று போராடுங்கள்...