ஆசிரியர்,அரசு ஊழியர்-ஒன்றுபட்ட போராட்டங்களின் வரலாற்றுப் பாதையில்.......
1985 இல் ஜேக்டி என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று
திரண்டு நாற்பது நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதில் 50000
ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர் .அதில் 10000 பேர் பெண்
ஆசிரியர்கள். தீபாவளி பண்டிகை அன்றும் ஆசிரியர்கள்
சிறையில் இருந்தனர்.இந்த போராட்டத்தின் போது
பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறையில் இறந்துவிட்டனர்.ஈரோடு
மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்ப பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. கருப்பண்ணன்
என்பவரே சேலம் சிறையில் இறந்த முதல் ஆசிரியர்.
போராட்டம் முடிவு பெற்ற பிறகு வேலை நிறுத்த
காலத்திற்கான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றனர்.சிறையில் இருந்த ஆசிரியர்களும்
ஊதியம் பெற்றனர்.போராட்டத்தின் விளைவாக ஆசிரியர்களுக்கு ஒரு
ஊதிய உயர்வு(increment) வழங்கப்பட்டது.1986 முதல் ஆசிரியர் அரசு ஊழியருக்கு
பொங்கல் போனஸ்,ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டே முக்கால் நாட்கள்
ஈட்டிய விடுப்பு(earn leave) அளிக்கப்பட்டது.இந்த இரண்டே முக்கால் நாட்கள் ஈட்டிய விடுப்பு
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 5 நாட்கள் , 7 நாட்கள் , 12 நாட்கள் ,என
உயர்ந்து தற்போது பதினேழு நாட்களாக உள்ளது.
1985 ஆசிரியர்களின் போராட்டம் 1988 இல் ஆசிரியர் அரசு ஊழியர் இணைந்து போராட தூண்டு கோலாக அமைந்தது.ஆட்சியாளர்கள் வரலாற்றைப் படிக்கட்டும்!!!!! ஆசிரியர்,அரசு ஊழியர் போராட்டம் வரலாற்றை படைக்கட்டும்!!!