ஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை? நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை என்று 'நீட்' விவகாரத்தில்
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நாமக்கல்லினைச்
சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் நீட் தேர்வின் காரணமாக தனக்கு மருத்துவ
சேர்க்கையில்பாதிப்பு உண்டானதாக கோரி உயர் நீதிமன்றத்தில்
வழக்குதொடுத்திருந்தார்.அந்த வழக்கானது இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. அப்பொழுது இன்று வெளியாகியுள்ள நீட் தரவரிசைபட்டியல் தொடர்பான
விபரங்களை நீதிமன்றம் கோரியது. அவற்றை இன்று மதியம் தாக்கல் செய்வதாக தமிழக
அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். அப்பொழுது நீட்
விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி
கருத்து தெரிவித்தார்.READ MORE CLICK HERE