மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: விடுமுறையிலும் கலந்தாய்வு நடைபெறும் - ராதாகிருஷ்ணன்
மருத்துவப் படிப்புக்கான நீட் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்கான அட்டவணை, அரசு இணையதளமான www.tnhealth.org -யில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
முதல்நாளான ஆகஸ்ட் 24 -ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25 -ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.








