ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில்,
'7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்' என்ற தலைப்பில், சிவகங்கை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் முன்பு விளக்கக்கூட்டம் நடந்தது. மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை
வகித்தனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சங்கர் முன்னிலை
வகித்தார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் மண்டலச் செயலாளர்
பேராசிரியர் குமார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி
ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் சேதுசெல்வம் ஆகியோர் விளக்கவுரை
ஆற்றினார்கள்.
READ MORE CLICK HERE