
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோகித்துக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழத்து தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.
நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.