மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் 2017-18-ஆம்
ஆண்டிற்கான 588 காலியிடங்களுக்கான இந்தியப் பொறியியல் பணித் தேர்வுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
UPSC இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ்) தேர்வுகளைப் போல் இந்தியப்
பொறியியல் பணித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. முதல்நிலைத்
தேர்வு, முதன்மைத் தேர்வு என இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக
நடத்தப்படும். பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் மட்டுமே இந்தத்
தேர்வை எழுத முடியும்.







