தீபாவளிக்கு முன் புதிய ஊதியம் வேண்டும் 'ஜாக்டோ - ஜியோ கிராப்' வலியுறுத்தல்:
'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பினர் வலியுறுத்தினர்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவால், போராட்டம் கைவிடப்பட்டது.








