பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில்,
நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி
குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 1 - 8ம் வகுப்பு வரையில், கல்வித் தரம்
மேம்பட, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதில், 5ம்
வகுப்பு வரையான இடைநிலை ஆசிரியர்களுக்கும், 6 - 8ம் வகுப்புகளுக்கு பாடம்
நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தனித்தனியே பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
இதில், நடப்பு கல்வியாண்டில், 'கற்றல் விளைவுகள்' என்ற தலைப்பில், நாளை
முதல், 30 வரையில், தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு, பயிற்சி
வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக, பயிற்சி கட்டடங்கள் தயார்
செய்யப்பட்டன. இதில், தாமதம் ஏற்பட்டு உள்ளதால், பயிற்சி நடத்த முடியாத
சூழல் உருவாகி உள்ளது.இதனால், பயிற்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல்
ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.