முடி கொட்டுவது ..கடந்த 3 வருடங்களாக தீராத பிரச்சினையாக இருந்தது எனக்கு.
தலையின் முன்பக்கம் தலையில் தோல் தெரியும் அளவு விசாலமாகிவிட்டது. இயற்கையிலேயே எனக்கு முடி அதிக நீளம் கிடையாது.அதையும் அடிக்கடி வெட்டிவிடுவேன் எனது வசதிக்காக.

2014 ல் மிகப்பெரிய அறுவை சிகிச்சை.
மருந்து,மாத்திரைகள் காரணமாகவோ,பலகீனத்தாலோ முடி கொட்ட ஆரம்பித்து விட்டது.எந்த ஹேர் கிளிப் போட்டாலும் முடியில் நிற்காமல் நழுவுமளவுக்கு எலிவால் போலாகிவிட்டது.
பிறகு சிலபல ஆராய்ச்சி,பலரது ஆலோசனைகள்,அனுபவங்கள் ,கட்டுரைகள்,வீடியோக்கள் எல்லாம் பார்த்து,கேட்டு நானே தைலம் காய்ச்சினேன்.அதுவும் 5 லிட்டர்.அதில் நான் தானம் செய்தது 4 லிட்டர். நல்லவேளை யாரோட முடிக்கும், தலைக்கும் செந்தில் மாதிரி சேதாரம் எதுவும் ஆகவில்லை..நான்
தப்பிச்சேன். இந்த தைலம் தயாரித்து
தொடர்ந்து பயன்படுத்தியதில் கைமேல். இல்லையில்லை தலைமேல் பலன் .
இப்போது முடி உதிர்வது நின்று நன்கு வளரவும் ஆரம்பித்து விட்டது.
விருப்பம் உள்ளவர்கள் செய்து பாருங்கள்.
#கூந்தல்_தைலம்_செய்முறை
சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்,_1லிட்டர்.
பெரிய நெல்லிக்காய்_ 15
கறிவேப்பிலை,மருதாணி,செம்பருத்தி இலை,கரிசலாங்கண்ணி இலை_ தலா
ஒரு கைப்பிடி அளவு
கீழாநெல்லி வேர்_ 20
செம்பருத்திப் பூ_25
சோற்றுக்கற்றாழை ஜெல் _ 100 கிராம்
வேப்பம்பூ உலர்ந்தது_சிறிதளவு
அவுரிப்பொடி _ 25 கிராம்
சுருள்பட்டை[ நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்] 20 கிராம்.
வெந்தயம்_25 கிராம்.[ வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு ,மேலே க.ஜெல்லைப் போட்டு முதல் நாள் இரவு வைத்தால் நன்கு ஊறிவிடும்]
கொடுக்கப்பட்ட பொருட்களை[சுருள்பட்டை,அவுரிப்பொடி,வேப்பம்பூ தவிர] சட்னியைப் போல் கெட்டியாக அரைத்து,
தேங்காய் எண்ணெய்யை காயவைத்து
அதில் போடவும்.அடுப்பை சிம்மில் வைத்து கொதி அடங்கியதும்,சுருள்பட்டையையும்,வேப்பம்பூவையும்,அவுரிப் பொடியையும் போட்டு உடனே அடுப்பை அணைக்கவும்.எண்ணெய் நன்கு ஆறியதும் நன்கு வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
மற்றொரு முறை
___________________
கொடுக்கப்பட்ட பொருட்களை கெட்டியாக அரைத்து வடைகளாகத் தட்டி
நிழலில் காய வைக்கவும்.[குறைந்தது ஒரு வாரமாகும் காய்வதற்கு] பிறகு
வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி ,அதில் காய்ந்த வடைகளைப் போட்டு வெள்ளைத் துணியால் கட்டி தினமும் வெயிலில் வைக்கவேண்டும்.வடையில் உள்ள சாறு எண்ணெயில் நன்கு இறங்கி நிறம் மாறும் வரை இப்படிச் செய்து ,பிறகு வடிகட்டி சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.