▫சென்னை:
'ஓராண்டில், பயணியர் மறந்து விட்டு சென்ற, 7.8 கோடி ரூபாய் மதிப்புள்ள
பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது' என, தெற்கு
ரயில்வே தெரிவித்துள்ளது.
▫ரயில்களில், பயணியர்
தவறவிடும் பொருட்களை மீட்டு, உரியவரிடம் ஒப்படைப்பதில், ரயில்வே பாதுகாப்பு
படையினருடன், ரயில் டிக்கெட் பரிசோதகர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
▫சமீபத்தில்,
வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டு பயணியர் தவற விட்டு சென்ற, ஆதார்
கார்டு, ஏ.டி.எம்., கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவை, ரயில் டிக்கெட்
பரிசோதகர்களால், மீட்கப்பட்டு, உரிய பயணியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
▫'ரயில்களில்,
2017ல், 5,065 பயணியர் தவற விட்டு சென்ற, 7.8 கோடி ரூபாய் மதிப்புள்ள
பொருட்கள், ரயில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர்
மற்றும் ஊழியர்களால் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது' என,
தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது







