வெண்டைக்காய் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றாக உள்ளது.
தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த ஒரு மூலமாகவே வெண்டைக்காய் உள்ளது.
1. இரத்த சோகை ( Anemia ) :
இரத்த சோகை ஏற்பட முக்கியமான காரணம் இரத்ததில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவது தான்.
வெண்டைக்காய் நீர் இரத்த சிவப்பு செல்களை உற்பத்தி செய்து ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
2. வறண்ட தொண்டை மற்றும் இருமல் :
வெண்டைக்காய் நீர் அருந்துவதால் தொண்டை வறட்சியை நீக்குகிறது மற்றும் இருமல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. தொண்டை வறட்சியை நீக்குவதற்கு வெண்டைக்காய் ஊரவைந்த நீர் அருந்தலாம்.
3. நீரிழிவு நோய் :
இப்போது சிறுவயதிலேயே நீரிழிவு நோய் வருகிறது. நீரிழிவு நோய் ஏற்பட காரணமாக இருப்பது இன்சுலின் சரிவர சுரக்காமல் இருப்பது தான்.
வெண்டைக்காய் நீரில் இன்சுலின் தன்மை கொண்டுள்ளது. இவைகள் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
4. வயிற்றுப்போக்கு :
வயிற்றுப்போக்கு அதிகமாகும் போது உடல் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். இறப்பிற்கு கூட வழி வகுக்கலாம். வயிற்றுப்போக்கு ஏற்படுவதால் உடலில் நீர் சத்துக்கள் குறைகிறது.
நீர் இழப்பால் மயக்கம் ஏற்படாமல் இருக்க வெண்டைக்காய் நீர் குடிக்கலாம். நீர் மட்டும் தனியாக அருந்துவது வயிற்றுப்போக்கை நிறுத்துவதில்லை.
5. நோயெதிர்ப்பு சக்தி :
நோயற்ற வாழ்விற்கு நோயெதிர்ப்பு சக்தி அவசியமாகும். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் நம் உடல் ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கப்படும்.
வெண்டைக்காய் நீர் அருந்துவதால் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.