இந்திராகாந்தி
திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு,
கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இக்னோவில்,
நடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நடந்து வருகிறது, வரும்,
31ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என, பல்கலையின் மண்டல இயக்குனர்,
கிஷோர் அறிவித்துள்ளார்.
மேலும், இக்னோ பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமா உள்ளிட்டவற்றில் சேரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். மத்திய மனிதவள அமைச்சக திட்டத்தின் கீழ், கட்டண விலக்கு வழங்கப்படும். விலக்கு கேட்பவர்கள், பல்கலை அதிகாரிகளை அணுகலாம் என, இக்னோ அறிவித்துள்ளது.