தட்கால் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, நாடுமுழுவதும் 19 செயலிகளுக்கு (ஆப்) இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது, “டெல்லி, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் தட்கால் ரயில் டிக்கெட்முன்பதிவில் சில தனியார் இணையதளங்கள், செயலிகள் (ஆப்) மூலம் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 19 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. மேலும் ஐஆர்சிடிசி இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றனர்.








