Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
ஒரு அழகான வேலைவாய்ப்பு செய்தி !!! மாப்ள ஏதோ #இரயில்வேத்துறை ல ஆள் எடுக்கிறாங்கலாமே டா?
ஒரு அழகான வேலைவாய்ப்பு செய்தி !!! மாப்ள ஏதோ #இரயில்வேத்துறை ல ஆள் எடுக்கிறாங்கலாமே டா?
அட ஆமாம் மச்சா, நீ விண்ணப்பிச்சிட்டீயா...?
இல்ல மாப்ள விண்ணப்பம் எங்க வாங்கனும், தபாலில் அனுப்பனுமா..?
இரயில்வேக்கும் #TNPSC மாதிரிதான் ONLINE லதான் விண்ணப்பிக்க முடியும்.
எந்த தளத்துல மாப்ள விண்ணப்பிக்குறது...? www.rrbchennai.gov.in இது மட்டுமே அதிகாரப்பூர்வமான இணைய பக்கம்.
சரி எவ்ளோ நாள் வரைக்கும் மாப்ள விண்ணப்பிக்கலாம்...?
10ம் வகுப்பு தகுதிக்கு 12/3/18 வரையும்(CEN 02/2018) ,டிப்ளமோ-இஞ்சினியர்-ஐடிஐ தகுதிக்கு 05/3/18 வரையும்(CEN 01/2018) விண்ணப்பிக்கலாம்.
மாப்ள நான் #ஐடிஐ படிச்சிருக்கேன் இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாமா..?
கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.இரண்டுமே தனித்தனி தேர்வுகள். ஒருவரே இரண்டு பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.இரண்டு தேர்வும் வெவ்வேறு தினங்களில் தான் நடக்கும்.
நல்லது மாப்ள விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம் செலுத்தனும் ...?
பொதுவாக--500ரூ, பெண்கள்,SC/ST, பிற்பட்ட வகுப்பினருக்கு --250ரூ. நீங்கள் OBC ஆக இருந்தாலும் உங்களால் இன்னும் ஆறு மாதத்தில் #வருமான_சான்றிதழ் 50000ரூ க்குள் பெற முடியுமானால் நீங்கள் ECONOMICALLY BACKWARD CLASS என்று கொடுத்து, 250ரூ செலுத்தினால் போதும்.
சரி மாப்ள விண்ணப்பிக்க என்னென்ன #சான்றிதழ்கள் தேவை?
எந்த சான்றிதழும் #தேவை_இல்ல மச்சா( SC/ST தவிர), நாம தேர்வுல வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது மட்டுமே சான்றிதழ்கள் தேவை.
அட அப்ப விண்ணப்பிக்கிறது ரொம்ப சுலபமா போச்சு மாப்ள.இன்னொரு சந்தேகம் இருக்கு நான் MBC, மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கனும்னா #OBC சான்றிதழ் தேவைனு சொல்லுறாங்களே...?
வேனும்தான் மச்சா, ஆனா இப்ப தேவை இல்ல தேர்வு லாம் முடிந்து நீ வெற்றி பெற்று கடைசியா சான்றிதழ் சரிபார்ப்பு சமயத்துல நீ கண்டிப்பாக கொண்டு சென்றால் போதும்.
அட நீ இப்படி சொல்ற மாப்ள ஆனா இணையத்துல விண்ணப்பிக்கும்போது OBCல CREAMY LAYERஆ/ NON CREAMY LAYER ஆ னு கேக்குதே?
நல்ல கேள்வி கேட்ட மச்சா, நாமெல்லாம் #NON_CREAMY_LAYER தான், ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் அதிக உள்ளவங்க தான் CREAMY LAYER. இங்கே நீ கவனமா விண்ணப்பிக்கனும் தவறுதலாக நீ CREAMY LAYER னு குடுத்தீன்னா உனக்கு #OBC_சலுகைகள் கிடைக்காது.
நல்ல வேளை நீ சொன்னீயே மாப்ள. சரி எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்..?
10ம் வகுப்பு தகுதி பணிக்கு 33வயது (OBC) வரையும் , டிப்ளமோ-இஞ்சினியர் தகுதி #LOCOPILOT பணிக்கு 31 வயது (OBC) வரையும் விண்ணப்பிக்கலாம்.
சரி மாப்ள நான் தேர்வுல பாஸ் பன்னுனதற்கு பிறகு என்ன தூக்கி #டெல்லி_பீகார் பக்கம் போட்றுவாங்களா....?
இப்படிலாம் உனக்கு யாரு மச்சான் சொன்னான். இந்திய இரயில்வே வை #17_மண்டலங்கலா பிரிச்சிருக்காங்க, நம்ம தமிழகம் தெற்கு இரயில்வே (SR) வில் வருகிறது.நீ விண்ணப்பிக்கும் போதே SOUTHERN RAILWAY #RRB_CHENNAI க்கு விண்ணப்பிச்சீனா, உனக்கு #வேலையும் கண்டிப்பாக தமிழகத்தில் தான் கிடைக்கும்.
முக்கியமான கேள்வி மாப்ள, எனக்கு #ஹிந்தி_இங்கிலீஷ் லாம் தெரியாது, தேர்வ எப்புடி எழுதுறது?
மச்சான் நம்ம #தாய்மொழி_தமிழ் ல தேர்வு எழுதலாம் டா, இது மம்தா பானர்ஜி இரயில்வே அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சட்டம்.
அப்ப சூப்பர் மாப்ள நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்.என்ன படிக்கனும்..?? எத்தனை கேள்விகள் வரும் னு ??மட்டும் சொல்லிடு..நான் படிக்க துவங்கிடுறேன்.
#பொதுஅறிவு_கணிதம் மட்டும் பார்த்தா போதும், #100கேள்விகள் வரும் #90நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
நல்ல தகவல்லாம் சொன்ன நன்றி மாப்ள.நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்..
சரி மச்சான், தேர்வில் வெற்றி கிட்டட்டும்..விண்ணப்பிக்க போகும்போது உன் #புகைப்படும் மட்டும் 20-45KB க்குள்ள #ஸ்கேன் பன்னிட்டு போ, வேற எந்த ஆவணங்களோ கையெழுத்தோ ஸ்கேன் செய்ய #தேவையில்லை.
-- பொறியாளர் கோ மருது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








