கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து கரூரில் நடக்க இருந்த ஒரு ஆய்வுக் கூட்டத்திற்கு காரில் சென்றிருக்கிறார்.
அப்போது, திருமாநிலையூர் அருகே இவரது கார் போனபோது, இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
அதைக் கண்டதும், திருமாநிலையூர் ரவுண்டானாவில் காரைத் திரும்பி விபத்து நடந்த இடத்திற்கு டிரைவரை ஓட்டச் சொல்லி இருக்கிறார்.
விபத்து நடந்த இடத்தில் போய் இறங்கி இருகிறார்.
இரண்டு டூவீலர்களும் மோதிக் கொண்டதில், ஒரு டூவீலரில் கணவரோடு வந்த தேன்மொழி என்ற இளம்பெண், பலத்த அடிப்பட்டு மயங்கி கிடந்திருக்கிறார். உடனே, அங்கிருந்து ஆம்புலன்ஸூக்கு போன் அடித்து வர சொல்லி இருக்கிறார்.
இன்னொரு பக்கம், கரூர் அரசு மருத்துவமனை டீனுக்கு போன் அடித்து, விபரத்தைச் சொல்லி, டாக்டர்களை அலர்ட்டாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அதோடு, கரூர் ஆர்.டி.ஓ, தாசில்தார், ஆர்.ஐ உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களை மருத்துவமனைக்கு போகச் சொல்லி இருக்கிறார்