அரசு ஊழியர் ஒருவரின் மனைவி குடும்ப
நல அறவை சிகிச்சை செய்து கொண்ட நாளிலிருந்து, அரசு ஊழியருக்கு மருத்துவச்
சான்றின் பேரில் 7 நாள் இவிவிடுப்பு வழங்கப்படும். முதல் அறுவைசிகிச்சை
பயன் அளிக்காத போது, மனைவி இரண்டாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டாலும் 7
நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம். -(அரசு ஆணை எண் 470, நிர்வாக
துறை, நாள்: 14.11.1990).
🌟 சில்லரை செலவின பணியாளருக்கும் இவ்விடுப்பு வழங்கலாம். (அரசாணை எண்-1452, நல்வாழ்வுத்துறை, நாள்:14.07.1982).
🌟 இந்த விடுப்புடன் அரசு விடுமுறை அல்லது பிற விடுப்புகளையும் சேர்த்து
எடுக்கலாம். இந்த விடுப்புகளை சாதாரணமாக விடுப்பு வழங்கும் அலுவலரே
வழங்கலாம். (அரசு ஆணை எண்- 356, நல்வாழ்வுத்துறை, நாள்:22.02.1982).
🌟 திருமணம் ஆகாத அல்லது இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாக உள்ளவர்
Recanalization Operation செய்து கொண்டால், மருத்துவ சான்றின் பேரில் 21
நாட்கள் விடுப்பு வழங்கலாம் (அரசு விடுமுறையும் சேர்த்து), இந்த விடுப்பை
பிற விடுப்புகளுடன் சேர்த்தும் எடுக்கலாம். (அரசாணை எண்- 2323,
நல்வாழ்வுத்துறை, நாள்: 28.12.1981).
🌟 ஆண் அரசு ஊழியர் குடும்ப நல சிகிச்சை செய்து கொண்டால் 8 நாட்கள்
விடுப்பு மட்டுமே வழங்கப்படும். (அடிப்படை விதி இணைப்பு விதியின் (I) ல்
உள்ள துணை விதி 7(ஏ) ன் கீழ்).
🌟 பெண் அரசு ஊழியர் Non-Puerperal sterllisation அறுவை சிகிச்சை
செய்துகொண்டால் 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்கலாம். பேறு
காலத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு
கிடையாது. (மேற்படி விதி)
🌟 தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் ஊழியர் குடும்பக் கட்டுப்பாடு
அறுவை சிகிச்சை செய்து கொண்டால் 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு
வழங்கப்படும். (அரசாணை எண் -299, நல்வாழ்வுத்துறை, நாள்:10.03.1982).
🌟 சில நேரங்களில் அறுவைசிகிச்சை காரணமாக மேற்படி விடுப்பிற்கும் அதிகமாக
சிறப்பு விடுப்பு தேவைப்பட்டால், மருத்துவ அலுவலரின் சான்றின் பேரில்
அதிகமான விடுப்பு வழங்கப்படும். (அரசாணை எண்-644, நல்வாழ்வுத்துறை, நாள்-
25.03.1982).
🌟 சாதாரண விடுப்பு வழங்கும் அலுவலரே இந்த விடுப்பை வழங்கலாம். (அரசாணை எண்- 356, நல்வாழ்வுத்துறை, நாள்: 22.02.1982).
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
