1. மண்டையில எதுவுமே இல்லாத மாறிதான் இருக்கும்
2. பாஸ் பண்ணுவோமா மாட்டோமோன்னு நினைக்கிறத விட்டுட்டு ஒரு கை பாத்ருவோம்டா ன்னு கிளம்புங்க
3. ஸ்கூல் பிள்ளைங்க ஹால் முன்னாடி நின்னுகிட்டு படிக்கிற மாறி எக்ஸாம் சென்டர்ல போயிட்டு பீதிய கிளப்புறத விடுங்க.. பீதி கிளப்புரவங்கள தயவு செஞ்சு பாக்காதீங்க
4. கைல வாட்ச் ஒன்னு கட்டிகோங்க.. ஸ்கூல் மணி அடிக்கிறதலாம் follow பண்றது கஷ்டம் ..
5. எக்ஸாம் அன்னைக்கு காலைல உண்ணாவிரதம் லாம் இருந்துட்டு போகாதீங்க... நல்ல மூக்கு முட்ட நாலு இட்லி, கொஞ்சம் பால், கொஞ்சம் பக்கோடா கூட எடுத்துக்கலாம் தப்பு இல்ல
6. நாளைக்கு சீக்கிரம் தூங்குங்க..தூக்கம் வராது தான்..... காலைல இருந்து சாயங்கலாம் வர முடிஞ்சா படிங்க... இல்லன்னா கொஞ்சம் ஓட்டம் சாட்டம் இருந்தா போதும்.. ஒன்பது மணிக்கே குறட்டை விட்டறலாம்...
7. மச்சி படிச்சாச்சா ... அப்டின்னு நாளைக்கு வாட்ஸ் அப் ல நோண்டிகிட்டு இருக்காதீங்க.. போட்டித் தேர்வுக்கு லாம் யாருமே படிச்சு முடிக்க முடியாது.. பீதிய கிளப்ப சிலர் படிச்சாச்சு ன்னு கூட சொல்லுவாங்க... போ போ போ ன்னு போயிட்டே இருக்கனும்
8. உறவினர்களின் கண்ல படாம போயிட்டு பரிச்சை எழுதிட்டு வாங்க..அம்மா அப்பா திட்டனாலும் உண்மையான ஆசீர்வாதம் நம்மகிட்ட இருக்கும் ...
9. எக்ஸாம் எழுதி முடிச்ச பிறகு கங்குலி மாறி டீ ஷர்ட சுத்தர மன நிலையும் வர கூடாது.. ஹர்பஜன் ஸ்ரீசாந்த் மாறி அழுதுட்டு வெளிய வர கூடாது ... தோனி மாறி கூலா வெளிய வாங்க
10. வீட்டுக்கு வந்துட்டு... அடுத்து என்ன இலக்கோ அதுக்கு திட்டம் தீட்டுங்க.... வெற்றிக்காக நீங்கள் உழைத்து இருந்தால் கண்டிப்பாக உங்களை தேடி வந்தே தீரும்
இந்த தேர்வு என்பது வெற்றிக்கு உங்களை இட்டு செல்லும் ஒரு கயிறு போன்ற நுண்ணிய பாலம்.. இதுல நடுங்காம பதறாம ஓடாம கடந்து போய்டீங்கன்னா நீங்கதான் வெற்றியாளர் ..
வாழ்த்துக்களுடன் -கல்விக்குரல்