🌷நிகழ்வுகள்
☀1275 - சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
☀1351 - சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
☀1493 - கடலோடி கொலம்பஸ் அமெரிக்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
☀1519 - எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.
☀1665 - இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
☀1793 - பிரெஞ்சுப் படைகள் நெதர்லாந்தின் கீர்ட்ரூடென்பேர்க் நகரைக் கைப்பற்றினர்.
☀1810 - பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.
☀1813 - நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜேர்மனியின் பேர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
☀1877 - எமிலி பெர்லீனர் ஒலிவாங்கியைக் கண்டுபிடித்தார்.
☀1877 - பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
☀1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
☀1894 - ஷங்காயில் ஏற்பட்ட பெரும் தீயில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.
☀1899 - குயீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
☀1908 - ஒகைய்யோவில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
☀1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
☀1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
☀1977 - ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
☀1980 - ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
☀1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
☀2001 - லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
☀2001 - போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
☀2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
☀2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.
👨👩👦👦பிறப்புகள்
⚡1678 - ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 1741)
⚡1769 - எகிப்தின் முகமது அலி (இ. 1849)
⚡1847 - கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904)1854 - நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. 1945)
⚡1877 - கர்ரெட் மார்கன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1963)
⚡1902 - நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971)
⚡1904 - ஜார்ஜ் காமாவ், உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968)
⚡1924 - கு. கலியபெருமாள், தமிழக செயற்பாட்டாளர் (இ. 2007)
⚡1935 - டியு குணசேகர, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி1938 - அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006)
⚡1944 - மூ. அருணாச்சலம், தமிழக அரசியல்வாதி (இ. 2004)
⚡1947 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
⚡1965 - பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்
⚡1986 - மைக் கிரிகேர், பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.
⚫இறப்புகள்
✨1193 - சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137)
✨1941 - லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858)
✨1967 - சண்முக ராஜேஸ்வர சேதுபதி, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1909)
✨1978 - நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1889)
✨2011 - அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1930)
✨2016 - பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1947)
✨2016 - பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. 1933
👌🏼சிறப்பு நாள்
🌤தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்( இந்தியா
┈┉┅━❀☀ROYAL☀❀━┅┉┈








