ஒரு மதிப்பெண் கேள்விகளில் 4 கேள்விகள் பாடப்பகுதியில் உள்ளே இருந்து எடுத்து சுயமாக கேட்கப்பட்டு இருந்தது. கட்டாய கேள்வியாக கேட்கப்பட்ட 70 வது கேள்வி பலருக்கு எளிதாக இருந்த நிலையில் பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமாக இருந்துள்ளது. அதனால் சென்டம் குறையும் வாய்ப்புள்ளதாக மாணவ- மாணவியர் தெரிவித்தனர். இதையடுத்து ஏப்ரல் 2ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு வருகிறது.
34 பேர் சிக்கினர்
பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வில் பறக்கும் படையினர் நேற்று அனைத்து தேர்வு மையங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் அண்ணா பல்கலைக் கழக பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பிட் அடித்ததாக மதுரை2, ஈரோடு 1, சேலம் 2,கரூர்1, அரியலூர்1, திருச்சி 6, விழுப்புரம் 21 பேர் என மொத்தம் 34 பேர் பறக்கும் படையிடம் சிக்கினர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பறக்கும் படையினர் பரிந்துரை செய்தனர்.








