இதையடுத்து 26ம் தேதி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இதுநாள் வரையில் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், தற்போது தேர்வுகள் துவங்கியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தினை தவிர்த்து வருகிறோம்.
இருப்பினும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் வரும் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. அதன் பிறகும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் மே மாதம் 8ம் தேதி சென்னையில் கோட்டை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளோம்.








