BLO பணி அனைவருக்கும் சமமாக வழங்கப்படுமா ஆசிரியர்கள் ஏக்கம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


BLO பணி அனைவருக்கும் சமமாக வழங்கப்படுமா ஆசிரியர்கள் ஏக்கம் :

தமிழ்நாட்டில் மொத்தம் 32  மாவட்டங்களில் 234 தொகுதிகள் உள்ளது.
✍ஒரு தொகுதிக்கு  சுமார் 250 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர் (BLO ) நியமிக்கப் படுகின்றனர்.
✍234 தொகுதிக்கு சுமார் 234*250=58500 வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியமர்தப்பட்டு வருகின்றனர்.
✍வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமனத்திற்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1950 13B(2)  பிரிவின் கீழ் 13 வகை அரசு | அரசு சார்ந்த துறையில் பணிபுரியும் பணியாளர்கள் BLO பணிக்கு உட்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை தந்துள்ளது....
✍13 வகை பணியாள் விபரம் :

1. சத்துணவு அமைப்பாளர் / அங்கன்வாடி பணியாளர்கள்
2. தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள்
3. கிராம நிர்வாக அலுவலர்
4. ஊராட்சி செயலாளர்
5. மின் கணக்கீடு செய்பவர்
6 அஞ்சலக ஊழியர்
7. துணை செவிலியர் & பேறு கால உதவியாளர்
8. சுகாதார பணியாளர்கள்
9. மதிய உணவு பணியாளர்
10. மாநாகராட்சி தண்டர்
11. கிராம பணியாளர்கள்
12. மேல்நிலை/ கீழ்நிலை எழுத்தர்
13. ஆசிரியர்கள்

✍மேற்கண்ட 13 வகை பணியாளர்களுக்கு BLO பணியை பகிர்ந்து அளிக்காமல் சேலம் மாவட்டத்தில் 90% ஆசிரியர்களை ( முழு நேர பணியாளர்) BLO வுக்கு உட்படுத்தப்பட்டு கல்வி நிலை , கல்வி தரம் சீரழிந்து வருகிறது.

✍ஒரு நடுநிலை பள்ளியில் சுமார் 8 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். அதில் 3 முதல் 4 ஆசிரியர்களையும் , தொடக்கப் பள்ளியில் சுமார் 2 முதல் 4 (அ) 5 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். அதில் 1 முதல் 2 (அ) 3 ஆசிரியர்களையும்  BLO பணிக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆகையால் BLO கூட்டம் நடத்தும் போது பள்ளியில் ஆசிரியர்கள் இல்லா நிலை ஏற்படுகிறது.

✍சேலம் மாவட்டத்தில் சட்ட மன்ற தொகுதி - 81 முதல் 91 வரை உள்ளது. 11 தொகுதிகளில் சுமார் 3200 க்கும் மேற்பட்ட BLO நியமிக்கப் பட்டுள்ளனர்.

✍சேலம் மாவட்டத்தில் 3200 BLO களில்  90% ஆசிரியர்களை (முழு நேர பணியாளர்) மட்டும் பணியில் அமர்த்தி கல்வி நிலையை சீர்குலைந்து வருகிறது.

✍ஆனால் தென் மாவட்டங்களில் BLO பணிக்கு ஆசிரியர்களை உட்படுத்தாமல் பகுதி நேர பணியாளர்களை BLO பணிக்கு உட்படுத்தி கல்வி நிலையை பாதுகாத்து வருகின்றனர்.

✍உதாரணமாக ......

👉திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட BLO பணி அமர்தப்பட்டுள்ளனர். இதில் 80% சத்துணவு அமைப்பாளர் , அங்கன்வாடி பணியாளர் மற்றும் கிராம பணியாளர்களை நியமனம் செய்துள்ளனர். 20% ஆசிரியர்களை உட்படுத்தி கல்வி நிலை பாதுகாத்துள்ளனர்.

👉திருநெல்வேலி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் சுமார் 2900 க்கும் மேற்பட்ட BLO பணி அமர்தப்பட்டுள்ளனர். இதில் 90% சத்துணவு அமைப்பாளர் , அங்கன்வாடி பணியாளர் மற்றும் கிராம பணியாளர்களை நியமனம் செய்துள்ளனர். 10% ஆசிரியர்களை உட்படுத்தி கல்வி நிலை பாதுகாத்துள்ளனர்.

✍சேலம் மாவட்டத்தில் கல்வி நிலை , கல்வி தரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால் ஆசிரியர்களுக்கு BLO பணியினை குறைத்து , பணியினை பகிர்ந்து மற்ற 12 வகை பணியாளர்களுக்கு வழங்க தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த 25/02/2018 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

✍சேலம் மாவட்ட ஆட்சியர் நமது சங்க மனுவினை படித்து கவனத்தில் எடுத்து கொள்வதாக கூறினார்.

✍சேலம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு android mobile ல்  BLO Register app மூலம் வாக்களார் பட்டியல் மரம் (Family Tree) தயாரிக்க இரண்டு கட்டமாக கூட்டம் நடத்தப்பட்டது.

✍சேலம் மாவட்டத்தில் பல வளரா கிராமங்கள் இருந்து வருவதால் அங்கு mobile ல் Net server குறைவாக காணப்படுகிறது. ஆகையால் பல ஆசிரியர் நண்பர்கள் voter list latitude முடிக்க முடியாத நிலை உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

✍இனி வரும் காலங்களில் எம் ஆசிரியர் இன நண்பர்களுக்கு வேலை பளுவினை குறைத்து BLO 12 வகையான பணியாளர்களுக்கு பணியினை பகிர்ந்து அளித்து  கல்வி பணி சிறந்து செயல்பட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🌸🌸🌸🌸🌸🌸
நே.மகேஸ்வரன் ,
தலைவர் , TATA ,
சேலம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H