இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியாகும்.ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.