Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்.
நடு இரவாகி விட்டது.
மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர்.
🌻வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் , மூவரும் ஒரு சேரத் தூங்கக் கூடாது என்றும் , ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
🌷அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும் , பலராமரும் தூங்கச் செல்ல , அர்ஜுனன் காவல் இருந்தான்.
அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.
🍄அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது.
அகன்ற நாசியும் , தூக்கிய பற்களும் , முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.
🌳 மரத்தடியில் இருவர் தூங்குவதையும் , அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.
அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.
💥அப்போது அவ்வுருவம் , அவ்விருவரையும் தான் கொல்லப்
போவதாகவும் , அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.
🌻 அதைக் கேட்டு கோபம் மிகக் கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.
🌷 அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக , அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.
🌴அர்ஜுனன் , ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது.
அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.
🌂இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பி விட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.
பலராமர் காவல் இருந்தார்.
🌲அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி , அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது.
அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.
👬 அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.
🍂 பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.
பின் பலராமரையும் பலமாகத் தாக்கி விட்டு , அவ்வுருவம் மறைந்து
விட்டது.
🌂மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பி விட்டு படுக்கச் சென்றார்.
அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.
🍀 அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் ?! என்றது அவ்வுருவம்.
🎃 உனது தூக்கிய பற்களும் , அழகான முட்டைக் கண்களையும் கண்டு தான் , என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்.
அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
😀 கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே , சண்டை போட்டார்.
😝கிருஷ்ணர் , சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே வந்தது.
😊 கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.🐛
ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது.
பலராமரும் , அர்ஜுனனும் எழுந்தனர்,.
🌿 இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும் , அவர்களைத் தாக்கியதும் , அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர்.
💥 அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி , நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான்.
😡 நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்.
உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது
😀 நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் , இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது.
👊வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு , புன்னகையோடு வெளியேறி விலகி இருந்து விட்டால் , அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.
😡 "கோபத்தைக் குறைப்பவனே ஞானி " என்றார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்
இப்படித் தான் நாம் பற்பல விஷயங்களுக்கு , நாம் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலே அந்த விஷயம் , பிரச்சனை ஆகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றும் இல்லாமல் போய் விடும்
முயன்று தான் பார்ப்போமே..
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








