நாளை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வு தொடர்பான வழக்கு நாளை 14.03.2018 புதன் கிழமையன்று நீதியரசர்
திரு. சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு
வந்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என்ற தரப்பில் மூத்த
வழக்கறிஞர் ஒருவரும் மற்றொரு வழக்கறிஞர் ஒருவருமென இரண்டு பேர்
வாதிடுகிறார்கள்... உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை
முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களுக்கும் இரண்டாவது
பதவி உயர்வாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க
வேண்டும் என்ற தரப்பில் ஐந்து முக்கிய வழக்கறிஞர்களும் நாளை வாதிட
உள்ளார்கள்...நாளைய விசாரணையில் அனல் பறக்கும்......பட்டதாரியாசிரி யர்களுக்கே வெற்றி கிடைக்கவேண்டும்.....கிடைக்கும் ....நம்பிக்கையுடன்,
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி மாவட்டம்.







