
1.ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு வரும் மனவளர்ச்சி குறைபாடாகும்
2.கேட்டல்( hearing)தொடுதல் ( touch) பார்த்தல்(vision) கற்றல் ( learning) இவற்றுள் ஏற்படும் சீரற்ற தன்மையால் வருவது ஆட்டிசம்
3.ஆட்டிசம் இதனால் தான் வருகிறது என்று ஆணித்தரமாக கூறமுடியவில்லை( cause unknown)
4.நவீன மருத்துவத்தில் ஆட்டிசத்துக்கு இன்னும் முழுத்தீர்வு எட்டப்படவில்லை( no cure discovered yet for autism)
அதனால் யாரும் அதை குணப்படுத்துகிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமே ஆகும்
தீர்வு இல்லையென்றால் அதை ஏன் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்?
விரைவில் கண்டறிந்தால் ( 1-2 வயதுக்குள்)
அக்குழந்தைகளுக்கு பேச்சுத் திறன் பயிற்சி( speech therapy), தன்னொழுக்கம் பேணுதல் பயிற்சி( self hygiene), கற்றல் பயிற்சி ( learning skill therapy)முதலியவற்றை கற்றுத்தரலாம்.
காலதாமதம் ஆனால் அக்குழந்தைகளின் மூளைத்திறன் குறைந்து புத்திக்குறைபாடுள்ள குழந்தையாக மாறிவிடும்
ஆட்டிசத்தை கண்டறிவது எப்படி ?
தாயும் தந்தையும் இதைக் கண்டறிவது சுலபம்
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவது எளிது. எப்படி ?
1. குழந்தை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
/நகர்ந்து கொண்டிருக்கும் பொருட்களையே பார்த்துக்கொண்டிருக்கும் eg. கடிகாரம்
(Fantasised by moving objects)
2. விளையாடும் பொருட்களிலும் சுழலும் பொருட்களையே வைத்து விளையாடும்
Eg. கார் பொம்மை கொடுத்தால் அது அந்த சக்கரத்தை சுழற்றியே விளையாடிக்கொண்டிருக்கும்
( interested in spinning objects).
3. பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றால் ஊஞ்சலில் மட்டுமே பல மணிநேரம் அசராமல் விளையாடும் ( playing in swing for long periods)
4. வீட்டில் தொலைக்காட்சி பார்த்தால் நேராக பார்க்காமல் ஒரு ஓரமாக கண்ணை வைத்துப் பார்க்கும் . ( peripheral glancing )
5. எதிர் நின்று பேசுபவரின் கண்களை பார்க்காமல் பேசும் ( avoid eye contact)
6. குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல், தனியாக விளையாடுவதை விரும்பும் ( solitary play)
7. நடக்க ஆரம்பிக்கையில் பின்னங்காலையும் ஊன்றி நடக்காமல் முன்னங்காலை வைத்து நடக்கும் ( toe walking )
8. தன் தாய் எங்கும் வெளியே போனால் சாதாரண குழந்தை அதுவும் கைகளைத் தூக்கி நானும் வருகிறேன் என்று கூறும் . ஆனால் ஆட்டிசம் உள்ள குழந்தை எந்த சிக்னலும் கொடுக்காது ( loss of anticipatory gesture )
9. அந்த குழந்தையை யார் தொட்டாலும் அதற்கு பிடிக்காது . கையைத் தட்டி விடும்
( sensitive to touch )
10. சொன்னதையே கிளிப்பிள்ளை போன்று சொல்லும் ( சாப்டியா என்று கேட்டால் அதுவும் சாப்டியா என்று கேட்கும்)( echo lalia)
11. தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் எனக்கு வேண்டும் என்று கேட்காமல் , அதன் பேரைச் சொல்லி கேட்கும். Eg. அதன் பெயர் ஓல்கா என்று வைத்துக்கொள்வோம். சாதாரண குழந்தை " எனக்கு இட்லி குடுங்க" என்று கேட்கும் ஆனால் ஆட்டிச குழந்தை " ஓல்காவுக்கு இட்லி குடுங்க" என்று கேட்கும் .( pronominal reversal )
12. தீபாவளி அன்று வெடிசத்தம் கேட்டால் கட்டிலுக்கு கீழ் ஒடி ஒளிந்து கொள்ளும், அதனால் அதிக சத்தத்தை தாங்க முடியதாது
( hyperacusis)
13. சாதாரண குழந்தைகள் விளையாட சொன்னால் சொப்பு சாமாண் வைத்து தானே கற்பனை செய்து வீட்டில் அம்மா சோறு, குழம்பு வைக்கும் விளையாட்டு விளையாடுவர். ஆனால் இந்த ஆட்டிச குழந்தைகள் கற்பனை செய்து விளையாடாது( lack of imaginative play)
14. இது வேண்டும் என்று கை நீட்டி கேட்கத் தெரியாது . Eg. தாகம் எடுக்கிறது தண்ணீர் வேண்டும் என்றால் தண்ணீர் பாட்டில் அருகில் சென்று அழுது கொண்டே இருக்கும் ஆனால் கை நீட்டி கேட்காது ( loss of proto imperative pointing)
15. ஒரு சாதாரண 12 மாத குழந்தை தான் விளையாடும் பொருளை தன் தாய்க்கு காட்டி பாருங்கள் என்பது போல சைகை செய்யும்(proto declarative pointing). மேலும் தான் மகிழ்வதை பிறருக்கும் பகிரும் ( lack of shared enjoyment)
இது இரண்டும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தை செய்யாது.
ஆகவே நட்புகளே
இந்த பதிவின் நோக்கம்
விரைவில் ஆட்டிசம் கண்டுபிடிக்கப்பட்டால்
அக்குழந்தைக்கு
பேச்சு, எழுத்து மற்றும் கற்றல் திறன்களை நாம் போதித்துவிடலாம்.
ஆகவே விரைவில் ஆட்டிசத்தை கண்டறிவோம்.