
30-6-2017வரையிலான விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்!
ஆதரவு விலை நிர்ணயிக்கும் குழுவில்2 விவசாய சங்க தலைவர்களும் இருப்பார்கள்!
விவசாயிகள் பிரச்சினைகளை ஆய்வு செய்ய, முதன்மை செயலாளர் தலைமையில் குழு..
6 மாதங்களில் வன உரிமை சட்டம் நிறைவேற்றப்படும்!
அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு, மகாராஷ்டிரா வருவாய் துறை அமைச்சர், விவசாயிகள் மத்தியில், அரசின் வரைவு நகலை வாசித்தார்!
கால்களில் ரத்தம் கொப்பளிக்க, வெற்றுக்கால்களோடு, நீண்ட நெடிய பயணத்தின் மூலம், சாதித்து விட்டீர்கள் தோழர்களே...
உயிர்ப்புடன் முன் செல்வோம் தோழர்காள்......
தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல, சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விவசாயிகள் பேரணி! - ஸ்தம்பித்த மகாராஷ்டிரா
சத்யா கோபாலன்
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாராஷ்டிராவில் மிகப் பெரிய பேரணி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது, இதனால் விவசாயிகள் தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய பொருட்களுக்கு குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய கிசான் சபா என்னும் விவசாய அமைப்பு, நாசிக் மாவட்டத்திலிருந்து மும்பை நோக்கி பேரணி நடத்தி, சட்ட சபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதன் படி கடந்த 6 ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சில நூறு விவசாயிகள் இணைந்து நாசிக் மாவட்டத்தில் தங்களின் பேரணியைத் துவக்கினர் அவர்கள் அனைவரும் நேற்று தானே வந்தடைந்தனர், இந்தப் பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும் , அரசியல் கட்சிகளும் இவர்களின் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் நூறு பேரில் துவங்கிய பேரணி தற்போது 30 ஆயிரம் பேரை கடந்துந்துள்ளது.
சற்றும் எதிர்பார்காதாத இந்த விவசாயிகளின் பேரணியால் மகாராஷ்டிரா மாநிலமும் அந்த அரசாங்கமும் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. இந்தப் பேரணி மற்ற மாநில விவசாயிகளின் கவனத்தை இவர்கள் பக்கம் திருப்பியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த பேரணி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதித்துள்ளது.