குறிப்பாக, 'ஜூரோ என்ரொல்மெண்ட்' எனப்படும் புதிய சேர்க்கையேஇல்லாத நிலையை,உருவாக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் ஒன்றாம் வகுப்பில், 20 மாணவர்களாவது சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள், பாடத்திட்ட மாற்றம், கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை விளக்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடன் இணைந்து, அரசுப்பள்ளியை மக்களின்பள்ளியாக மாற்ற, ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாறுகிறது. துவக்க வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாறுவதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகலாம். வரும்மே 2ம் தேதி முதல், சேர்க்கை பணிகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'புதிய சேர்க்கை இல்லாத பட்சத்தில், உரிய காரணம் விளக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுமையான வழிமுறைகளில் பெற்றோரை அணுக திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.








