லெபனானின் தலைநகரான பெய்ரூட் வீதிகளில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்த
வந்த நடக்க முடியாத, கைகளும் இயங்காத பாத்திமா ஒத்மான் சென்ற வாரம்
செவ்வாய்க்கிழமை இரவு சாலை ஓரம் இறந்து கிடந்துள்ளார்.
இவரது பையை ஆய்வு செய்த போது இந்திய மதிப்பில் 2.24 லட்சம் ரூபாய்
மதிப்பிலான லெபானான் நாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தை கண்டு அதிர்ச்சி
அடைந்த காவல் துறையினர் மேலும் இவரது பையைச் சோதனை செய்த போது அதில் இருந்த
வங்கி கணக்குப் புத்தகத்தில் 7.50 கோடி ரூபாய் இருப்பதும்
தெரியவந்துள்ளது.
பாத்திமா ஒத்மான் குடும்பத்தில் இவரது தாய், 2 அண்ணண் மற்றும் 5
தங்கைகள் என 8 பேர் உள்ளனர். இவரது குடும்பத்தினருக்கு இவரது பணம்,
சேமிப்புகள் குறித்துத் தெரியாது என்றும் யாரும் இவரைப் பிச்சை எடுக்க
வற்புறத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தன்னிடம் அவ்வளவு பணம் இருப்பதை யாரிடமாவது சொன்னால் தன்னை எங்குக்
கொன்று விடுவார்களோ என்று மக்கள் இவருக்கு இரக்கப்பட்டு அளித்த பணத்தினை
அனுபவிக்கும் முடியாமல் இறந்துள்ளார்