ஆசிரியர்கள் போராட்டம்: சர்ச்சையில் சிக்கிய பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 21 June 2018

ஆசிரியர்கள் போராட்டம்: சர்ச்சையில் சிக்கிய பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்


உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர்.

சென்னை: ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இரவு முதல் அதிகாலை வரை  கவுன்சலிங் நடந்ததால் ஆசிரியர்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.  பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் கடந்த 13ம் தேதி தொடங்கியது.கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்னதாக பணி நிரவல் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம்  காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய கவுன்சலிங் இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடிந்துள்ளது.  இதனால் ஆசிரியர்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உபரி ஆசிரியர் பணியிடங்கள் தவறாக கணக்கிட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நேற்று நடக்க இருந்த  கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டது.  இதுனால், நேற்று காலை கவுன்சலிங்குக்கு வந்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:



கவுன்சலிங் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பதால் காலையில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வந்துவிட்டனர். ஆனால் கல்வி அதிகாரிகளின் தவறான கணக்கீடுகளால் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்குத்தான் கவுன்சலிங் தொடங்கியது. காலை 3.30 மணிக்கு முடிந்தது. இதுபோன்ற கவுன்சலிங்கை வாழ்நாளில் பார்த்ததே இல்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை என எல்லா மாவட்டங்களிலும் இதுபோல நடந்துள்ளது.

மேலும் திருச்சி முதல் சென்னை வரை உள்ள பணியிடங்கள் காட்டவில்லை. பணி நிரவல் ஆணைக்கு எதிராக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை வைத்து கவுன்சலிங் நடத்தப்படுகிறது. இது  முற்றிலும் தவறு. பலமுறை கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தவறான செயல்முறை மூலம் கவுன்சலிங் நடத்துவதால் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசாணை எண்266ல் பணி நிரவல் செய்யும் போது பாடவாரியாக செய்ய வேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முதலில் தமிழ் பாடத்தை எடுக்க வேண்டும். ஆனால் கல்வி அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல பாட ஆசிரியர்களை எடுக்கின்றனர்.

மேலும், 9, 10ம் வகுப்புகளுக்கு 5 ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையில் கூறப்பட்டுள்ளது. அந்த விதி பின்பற்றப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான விதிகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். ஆணைப்படி பாட வாரியாக எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மேலும் உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர். தவறான கணக்கின்படி பணி நிரவல் செய்ததால் இப்போது காலிப் பணியிடங்களே இல்லை. அதனால் இன்று நடக்கவேண்டிய, மாவட்டத்துக்குள் மாவட்டம்,  மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற கவுன்சலிங் ரத்தாகிவிட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H