சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் நேரில்பார்வையிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அந்தந்த தேர்வர்கள், தங்கள் விடைத்தாள் நகலை நேரில் வந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்படும் அனைவரின் விடைத்தாள் நகலையும் அனைவரும் பார்க்கும் வகையில் ஆன்லைனில் வெளியிட ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வாறு வெளியிட்டால்தான் வெளிப்படைத்தன்மையையும்,நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்குமுன்பு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவின்போது அனைத்து தேர்வர்களின் விடைத்தாள் நகல்களும் ஆன்லைனில் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.








