பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.18 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.18

திருக்குறள்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.

விளக்கம்:

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

பழமொழி

First come first serve

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து


இரண்டொழுக்க பண்பாடு

1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர்      பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்.

2.பிறர் செய்யும் நற்செயலுக்கு மதிப்பு அளிப்பதுடன், அதனை தொடர்வேன்.

 பொன்மொழி

என் முயற்சிகள் என்னைப் பல முறை கைவிட்டதுண்டு!
ஆனால்
நான் ஒரு முறை கூட முயற்சியைக் கைவிட்டதில்லை!

         - எடிசன்

பொதுஅறிவு

1.சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

டாக்டர். அம்பேத்கர்

 2.ஆர்னித்தாலஜி   (Ornithology) என்பது என்ன?

பறவைகள் பற்றிய படிப்பு

English words and. Meanings

Glorious---   புகழ்பெற்ற
Guest-------   விருந்தினர்
Gesture-----  சைகை
Gymnastics  உடற்பயிற்சி
Graphics-----வரைகலை

நீதிக்கதை

பொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை
(Don't Lie - Tamil Moral Story)

அது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.

முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.

ஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.

காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.

தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

 வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென "புலி வருது, புலி வருது", என்று கூச்சலிட்டான்.

ராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் "புலி எங்கே" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, "புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.

மூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே "புலி வருது, புலி வருது" என்று கூச்சலிட்டான்.

ராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.

பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.

நான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.

நீதி: ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என  நம்ப மாட்டார்கள்.

இன்றைய செய்திகள்

10.08.2018

* கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை. மண்சரிவில் சிக்கி 8 பேர் பலி.

* மாநிலங்களவைத் துணைத் தலைவவராக ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு.

* எம்.எஸ்.சி படிப்புகளுக்கு வருகின்ற 13 ஆம் தேதி கலந்தாய்வு. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

* வியட்நாமில் நடக்கும் சர்வதேச ஓபன் பாட்மின்டன் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் அஜய் ஜெயராம் முன்னேறினார்.

* மாஸ்டர் செஸ் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவின் ரத்தன்வேல், வியட்நாம் கிராண்ட்மாஸ்டர் லீ குவாங் லியமை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

Today's Headlines

🌸A tropical storm watch has been issued for the Big Island of Hawaii as Hurricane Hector on Tuesday kept churning west across the Pacific as a powerful Category 4 hurricane.🌊
🌸Inspector-General of Police, Home Guards and Civil Defence Roopa D. said here on Wednesday that technology by the way of biometric and automated duty rotation systems would be introduced in the Home Guards organisation to weed out corruption.🌹
🌸IndiGo Airlines will add an additional flight on Coimbatore-Chennai sector from September.🌹
🌸Coimbatore:The South West Monsoon shower the city experienced on Wednesday morning will continue for the next two days.🌹
🌸The Pollachi Tamizhisai Sangham’s 33rd dance festival will be held from August 10 to 15 at KKG Thirumana mandapam on Palladam Road, Pollachi.🌹
🌸A 10-member Indian team with Deaflympics bronze medallists Prithvi Sekhar and Jafreen Shaik will compete in the World Deaf tennis championship to be held in Antalya, Turkey, from September 22 to 29.🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H