இது குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். அதில் தனது அறக்கட்டளை மூலம் வீடு இல்லாதோரின் குடும்பங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500 கோடி (2 மில்லியன் டாலர்) நிதி உதவி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் குறைந்த வருவாய் உள்ளோரின் குழந்தைகள் படிக்க மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் பதிவிட்ட போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெசோஸ் டே ஒன் ஃபன்ட் (Bezos Day One Fund) என்ற பெயரில் இதற்கென புதிய அமைப்பை ஜெஃப் பெசோஸ் துவங்கி இருக்கிறார்.
கடந்த ஒருவருடமாத எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு தற்சமயம் ஜெஃப் ட்வீட் மூலம் வெளியாகியுள்ளது. முன்னதாக 2017-ம் ஆண்டு ட்விட்டரில் அவசர தேவை மற்றும் நீண்ட காலத்திற்கு அதன் நன்மை நீடிக்கும் படியான யோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தார்.
அவ்வாறு தனக்கு பல்வேறு பதில்கள், யோசனைகள் ஆக்கப்பூர்வமாகவும், உதவிகரமாகவும் இருந்தது என அவர் தெரிவித்து, கருத்துக்களை பாராட்டுவதாக தெரிவித்தார். அந்த வகையில் தனக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இரண்டு நலத்திட்டங்களை தேர்வு செய்திருக்கிறார்








