15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' :

பள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.
15.66 லட்சம், மாணவர்களுக்கு, விரைவில், அதிநவீன, 'லேப்டாப்'
தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.




வழங்க முடிவு


இதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை.இந்நிலையில், 2017-18ல் படித்த மாணவர்களுக்கு மட்டுமின்றி,
நடப்பு கல்வி ஆண்டில்,பிளஸ் 1, பிளஸ் 2 படிப்போர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இந்த ஆண்டிலேயே, லேப்டாப் வழங்க, பள்ளி கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.

இதற்காக, இந்திய தர நிர்ணய ஆணைய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம், 15.66 லட்சம் லேப்டாப்கள் வாங்கப்பட உள்ளன. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகள், 'எல்காட்' என்ற, தமிழக அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாயிலாகதுவக்கப்பட்டுள்ளன.

நவீன வசதிவெப் கேமரா, வைபை, ப்ளூடூத் வசதி, தமிழ் மொழிக்கான யூனிகோட் கீ போர்ட், 500 ஜி.பி., தகவல்களை சேகரிக்கும் வசதியுள்ள ஹார்ட் டிஸ்க், டி.டி.ஆர்., - 4 வகை ரேம் போன்ற தொழில் நுட்பங்களுடன், லேப்டாப்கள் வாங்கப்படுகின்றன. லேப்டாப்களில், மாணவர்களின் உயர்கல்விக்கான அம்சங்கள், தமிழக அரசின் கல்வி திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை பதிவேற்ற உத்தர விடப்பட்டுள்ளது.

அதேபோல, 'விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், லினக்ஸ்' என்ற, இரண்டாவது ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இணைக்கப்படுகிறது. இதனால், இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற உயர்கல்வியிலும், இந்த லேப்டாப்களை
பயன்படுத்த முடியும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
யார் யாருக்கு கிடைக்கும்?


கடந்த ஆண்டில், பிளஸ் 2 படித்த, 4.72 லட்சம் மாணவர்கள்; 12 ஆயிரத்து, 663 ஐ.டி.ஐ., மாணவர்கள்; இந்த ஆண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 10.66 லட்சம் பேர்; பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிக்கும், 13 ஆயிரத்து, 679 பேருக்கு, லேப்டாப் வழங்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
DINAMALAR

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H