நீண்ட நாள் வாழ ஆசையா ? அப்ப நிலக்கடலை சாப்பிடுங்க... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நீண்ட நாள் வாழ ஆசையா ? அப்ப நிலக்கடலை சாப்பிடுங்க...

ஆயுளை அதிகரிக்கும் வேர்க்கடலை: நிலக்கடலை (வேர்க்கடலை) கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.



இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.

நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்.மறந்துபோன நம் பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், நிலக்கடலை குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது.

கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ்-ம் கூட.இதன் மகிமை தெரிந்தால்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.

சத்துகள்
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.மேலும் வேர்க்கடலையை சாப்பிடுபவர்கள் நீண்ட நாள் வாழலாம். Ñமரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தசைகளை வலிமையாக்கும்
நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.

Image result for கொழுப்பைக் குறைக்கும்

கொழுப்பைக் குறைக்கும்
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது.நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

மன அழுத்தம் போக்கும்
நிலக்கடலையில் டிரைப்டோபீன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

நினைவாற்றல் அதிகரிக்கும்
இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.


Image result for proven cardiobiotic 30 capsule
இதயம் காக்கும்
நிலக்கடலையைறீத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), , ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள்கள் நிலக்கடலையைச் சாப்பிட்டு வருவது இதய நோய்களைத் தடுக்க உதவும்.

புரோட்டின் நிறைந்தது
கடலையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ளது. அதாவது, இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.

இளமை பராமரிக்கும்
இதிலுள்ள சத்துகள் முதுமையைத் தள்ளிப்போடுவதுடன், இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.வேர்க்கடலை

கருப்பைக் கோளாறுகள் நீங்கும்
நிலக்கடலையில் உள்ள சத்துகள் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. குறிப்பாக நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பகக்கட்டி ஏற்படாமல் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பித்தப்பை கல் கரைக்கும்
நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

Image result for எலும்பு

எலும்புக்கு வலிமை தரும்
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H