_🔸🔹இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது._
_🔸🔹இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்._
*🔸🔹ஆயுஷ்மான் பாரத் எனப்படும் இந்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட தொடங்கும். வருகிற 26-ந்தேதி முதல் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.*
_🔸🔹2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மருத்துவக் காப்பீட்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து ஆண்டுக்கு 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது_
*◆ ▬▬▬▬ ❴வசந்தம்❵ ▬▬▬▬ ◆*








