சிறுவர்களை
பலி வாங்கும், 'மோமோ கேம்' தொடர்பாக, மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க
வேண்டும்' என, பள்ளிகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன், 'ப்ளூ வேல்' என்ற, நீல திமிங்கல விளையாட்டு, மாணவர்களை அச்சுறுத்தியது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், சமீப காலமாக, மோமோ என்ற, 'வாட்ஸ் ஆப்' விளையாட்டால், இளம் பருவத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில், இதை விளையாடுவோர், அதிக அளவில் இல்லை என்றாலும்,
மற்ற மாநிலங்களில், மோமோவால், பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்; பலர்
மனநிலை பாதித்துள்ளனர். எனவே, மோமோ விளையாட்டு குறித்து, மாணவர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை
எடுத்துள்ளது.
இது குறித்து, அந்த அமைச்சகம், அனைத்து மாநில கல்வித் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மோமோ கேம் விளையாட்டை செயல்படுத்தும் நிறுவனத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, அதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரம், மாணவர்கள் யாரும், இந்த விளையாட்டில் ஈடுபடாமல், ஆசிரியர்கள்

Advertisement
கண்காணிக்க வேண்டும். இது குறித்து, மாணவர்களை கண்காணிக்கும்
வகையில், பெற்றோருக்கும் ஆலோசனை கூற வேண்டும். மாணவர்கள், அதிக அளவில்
மொபைல் போன்களை பயன்படுத்தாமல், படிப்பில் அக்கறை செலுத்தும் வகையில்,
அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.source Dinamalar.
- நமது நிருபர் -
- நமது நிருபர் -